உறுமய காணி அளிப்பு பத்திரங்களை வழங்கும் வேலைதிட்டங்கள் குறித்து விசேட கூட்டம்
ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு அமைவாக உறுமய காணி அளிப்பு பத்திரங்களை வழங்கும் வேலை திட்டங்களை விரைவாக முன்னெடுப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது, இன்று (24. 07.2024) பகல் 10:30 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, வடக்கு மாகாண பிரதம செயலாளர் இளங்கோவன் மற்றும் கண்டாவளை, கரைச்சி, பூநகரி, பச்சிலைப்பள்ளி ஆகிய பிரதேச செயலாளர்கள், காணி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
உரிய நடவடிக்கைகள்
மேலும், எதிர்காலத்தில் உறுமய காணி உறுதிப் பத்திரங்களை விரைவாக வழங்குவதற்குரிய வேலைதிட்டங்களை முன்னெடுப்பது தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது என மாவட்ட அரச அதிபர் எஸ் .முரளிதரன் தெரிவித்துள்ளார்.
அது மாத்திரமன்றி, இதுவரை 1375 உறுமய காணி உறுதி பத்திரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன எனவும் ஏனையவற்றையும் வழங்குவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |