கனடாவில் பெண் சட்டத்தரணி ஒருவருக்கு விதிக்கப்பட்ட தடை
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் பெண் சட்டத்தரணி ஒருவருக்கு தொழில் நியதிகளுக்கு புறம்பான வகையில் செயற்பட்டமைக்காக தொழில் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சட்டத்தரணி ஹொங் கோவ் என்ற பெண் சட்டத்தரணிக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் மோசடி செயல்களில் ஈடுபட்டதாகவும் நிதி கையாடல்களில் ஈடுபட்டதாகவும் சட்டத்தரணி மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்ததோடு, இந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
ஒழுக்க விதி மீறல்கள்
இதன்போது தொழில் நியதிகளுக்கு புறம்பான வகையில் சட்டத்தரணி செயற்பட்டுள்ளதாக தீர்ப்பாயம் அறிவித்துள்ளது. இதன்படி, ஹொங் கோவ், இனி சட்டத்தரணியாக செயற்படுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, 45500 டொலர்கள் தண்டப் பணமாக செலுத்த வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த சட்டத்தரணி பல்வேறு சந்தர்ப்பங்களில் ஒழுக்க விதி மீறல்களில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |