மைத்திரியின் உத்தியோகபூர்வ இல்லம் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பதவியில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் உத்தியோகபூர்வ இல்லம் வழங்கப்பட்டமை தவறென்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் கொழும்பின் ஆடம்பரக் குடியிருப்புகள் அமைந்துள்ள மஹகம சேகர மாவத்தை (பெஜட் வீதி)யில் இரண்டு ஆடம்பரக் குடியிருப்புகளை ஒன்றிணைத்து, நவீனமயப்படுத்தி அதனை உத்தியோகபூர்வ இல்லமாகப் பயன்படுத்தி வந்தார்.
அமைச்சரவைப் பத்திரம்
இந்நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு சற்று முன்னதாக ஒக்டோபர் 15ஆம் திகதி மைத்திரியின் தலைமையில் நடைபெற்ற கடைசி அமைச்சரவையில் தான் வசிக்கும் உத்தியோகபூர்வ இல்லத்தை பதவி ஓய்வின் பின்னரும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் அமைச்சரவைப் பத்திரமொன்றை சமர்ப்பித்து அங்கீகாரம் பெற்றுக் கொண்டிருந்தார்.
மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் தலைவர் பாக்கியசோதி சரவணமுத்து அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
குறித்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்ட நிலையில், 2019ஆம் ஆண்டின் ஒக்டோபர் 15ஆம் திகதி அமைச்சரவைத் தீர்மானம் ரத்துச் செய்யப்பட்டதுடன், மைத்திரிக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லம் மீளக் கையளிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |