தமிழரசுக் கட்சிக்கு எதிரான யாழ் வழக்கில் சட்டத்தரணி குருபரன் நிலைப்பாடு
தமிழரசுக் கட்சிக்கு எதிரான வழக்கு யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றால் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி என்.சிறிக்காந்தா தெரிவித்துள்ளார்.
குறித்த வழக்கு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
இந்த வழக்குகள் சுருக்கமாக தீர்க்கப்படக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது என்பது இரண்டு தரப்பினரதும் பொதுவான நிலைப்பாடாக இன்று யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்திலே தெரிவிக்கப்பட்டது.
மறுமொழி தாக்கல்
இருந்தாலும், சட்ட விதிகளுக்கு அமைவாக இன்றைய தினம் நாங்கள் மறுமொழி தாக்கல் செய்வதற்கு திகதி குறிப்பிடுமாறு நான் கோரியிருந்தேன்.
அந்த அடிப்படையில், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25ஆம் திகதிக்கு மறுமொழி தாக்கல்
செய்யுமாறு வழக்கு தவணை இடப்பட்டு இருக்கிறது.

அத்துடன், ஐந்தாவது எதிராளியான சண்முகம் குகதாசனுக்கு மீண்டும் அழைப்பு கட்டளை அனுப்பப்படுவதற்கும் உத்தரவிடப்பட்டிருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
குணசேகரன் போடும் மாஸ்டர் பிளான், ஜனனி சமாளிப்பாரா?... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
2025ஆம் ஆண்டு வசூல் சாதனை படைத்த காந்தாரா தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? Cineulagam