கைது செய்யப்பட்ட கற்றாழை நிறுவன பணியாளர்கள்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
வனவளத்திணைக்களம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த 9 கற்றாழை நிறுவன பணியாளர்களையும் எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற பதில் நீதவான் எஸ்.சிவபாலசுப்பிரமணியம் உத்தரவிட்டார்.
நேற்றுமுன்தினம்(24)கிளிநொச்சி அக்கராயன் குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்கந்தபுரம் கண்ணகைபுரம் பகுதியில் கற்றாழை செய்கை மேற்கொள்ளும் ஊழியர்களுக்கும் கிராமிய இளைஞர்களுக்குமிடையில் ஏற்பட்ட வாய்த்தக்கம் கைகலப்பாக மாறியிருந்தது.
இந்தநிலையில் குறித்த பகுதிக்கு வனவளத்திணைக்களத்தினரும் சென்றிருந்த நிலையில் நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டனர்.
மேலதிக விசாரணை
இதன்போது 09சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.ஒன்பது சந்தேக நபர்களில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 09சந்தேக நபர்களையும் அக்கராயன் குளம் பொலிஸார் நேற்று(25) நீதிமன்றில் முற்படுத்தியிருந்தனர்.
சந்தேக நபர் சார்பாக சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் முன்னிலையாகி இருந்தார்.

குறித்த சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி நீதிமன்றில் சந்தேக நபர்களை முற்படுத்திய நிலையில் எதிர்வரும் 28ஆம் திகதிவரை விளக்கம் மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக அக்கராயன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 10 மணி நேரம் முன்
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri