ஜனாதிபதியைச் சந்திக்க நேர ஒதுக்கீடு கோரும் தமிழ்க்கட்சிகள்
இந்த மாத ஆரம்பத்தில் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான தமது தீர்மானத்தை அறிவித்த ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகள், தமிழ் பேசும் மக்களைப் பாதிக்கும் முக்கிய விடயங்களில் இணைந்து செயற்படுவதற்கான தமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளன.
இதற்கமைய, மேற்படி கட்சிகள் தத்தமது சுயாதீனம், அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் கொள்கைகளைப் பாதுகாத்துக் கொண்டு, பொதுவான இணக்கப்பாடு காணப்படும் விடயங்களில் தமிழ் பேசும் மக்களின் நலனுக்காக ஆக்கபூர்வமான முறையில் இணைந்து செயற்பட இணக்கம் தெரிவித்துள்ளன.
நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற சந்திப்பின்போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கோரிக்கை
அத்துடன், தமிழ் பேசும் மக்களைப் பாதிக்கும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதியைச் சந்தித்துக் கலந்துரையாட இந்தக் கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதற்காக ஜனாதிபதியிடம் நேர ஒதுக்கீடும் கோரப்பட்டுள்ளது.
ஜனாதிபதியுடனான சந்திப்பைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவரையும், இலங்கையில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரப் பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேச்சு நடத்தவும் அந்தக் கட்சிகள் எதிர்பார்த்துள்ளன.

இதன் மூலம் இந்த விடயங்கள் தொடர்பாகக் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டு, ஜனநாயக ரீதியிலான ஆக்கபூர்வமான கலந்துரையாடல்கள் ஊடாக பரந்த இணக்கப்பாட்டை உருவாக்க முயற்சிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
தமது கோரிக்கைக்கு ஜனாதிபதி சாதகமான பதிலை வழங்குவார் என நம்பிக்கை வெளியிட்டுள்ள அந்தக் கட்சிகள், இணக்கப்பாடு காணப்படும் விடயங்களில் தொடர்ந்து ஒன்றிணைந்து செயற்பட்டு நீதி, நிலையான சமாதானம் மற்றும் நீடித்த அரசியல் தீர்வை நோக்கிப் பயணிப்பதில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளன.
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 11 மணி நேரம் முன்
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan