உதவிக்காக காத்திருந்த பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 70 பேர் பலி
காசா நகரின் அருகே உதவிப் பொருட்களை பெறுவதற்காக ஏராளமான பாலஸ்தீனர்கள் காத்திருந்த போது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 70 பேர் பலியாகியுள்ளதோடு 280 பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த தாக்குதலானது இன்று(29.02.2024) மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காசா சுகாதார அமைச்சக செய்தித் தொடர்பாளர் அஷ்ரப் அல்- கித்ரா தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் இராணுவம் ஆய்வு
மேலும், இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 30,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகவும் சுகாதார அமைச்சகம்அறிவித்துள்ளது.
இந்த தகவல் குறித்து ஆய்வு செய்து வருவதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
காசா முனையின் பெரும்பாலான பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ள இஸ்ரேல், தெற்கு பகுதியில் எஞ்சியுள்ள ரபா நகரையும் தாக்க திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |