மன்னாரில் மீட்கப்பட்ட 53 ஆயிரம் போதை மாத்திரைகள்
மன்னார் இலுப்பைக்கடவை தடாகத்தில் புதர்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 53 ஆயிரம் போதை மாத்திரைகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த போதை மாத்திரைகள் இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போது நேற்று(28.02.2024) மீட்கப்பட்டுள்ளது.
சட்ட நடவடிக்கை
சட்ட விரோதமான பொருட்கள் நாட்டிற்குள் வருவதை தடுக்கும் நோக்கில் கரையோர மற்றும் கடற்கரை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட வழமையான நடவடிக்கைகளின் போது இந்த கடத்தல் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையில் உள்ள SLNS புவனேகாவினால் இலுப்பைக்கடவை தடாகத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் (STF) உதவியுடன் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் போது, கடற்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அருகே உள்ள புதர்களில் சந்தேகத்திற்கிடமான பெட்டியை மீட்டுள்ளனர்.
இதன் போது 53 ஆயிரம் போதை மாத்திரைகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட போதை மாத்திரைகள் சட்ட நடவடிக்கைகளுக்காக இலுப்பைக்கடவை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சாந்தனுக்கு வஞ்சம் தீர்த்த காலம்! கட்டியணைத்து கதற காத்திருக்கும் தாய் - சதியால் திசைமாறிய பாசப்போராட்டம்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |