வெளிநாடுகளில் பதுங்கியுள்ள 43 இலங்கை குற்றவாளிகள் அடையாளம் – 17 பேர் துபாயில்!
சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டு தேடப்பட்டு வரும் 43 இலங்கை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு சந்தேகநபர்கள் தற்போது தங்கியுள்ள நாடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
அவர்களில்: - 17 பேர் – துபாய் - 14 பேர் – இந்தியா - 3 பேர் – ஜப்பான் - 9 பேர் – ஏனைய 9 நாடுகளில் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இவர்களுக்கு எதிரான விசாரணைகள்
இவர்கள் அனைவரையும் விரைவில் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

கடந்த இரண்டு வருடங்களில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடைய 818 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெளிநாடுகளில் உள்ள குற்றச் சந்தேகநபர்களுக்கு எதிராக 233 இன்டர்போல் சிவப்பு அறிவித்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன. 92 நீல அறிவித்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
வெளிநாடுகளில் இருந்து 72 குற்றச் சந்தேகநபர்கள் ஏற்கனவே இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு எதிரான விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.