மாவீரர் நினைவேந்தலில் சர்ச்சையை ஏற்படுத்திய காணொளி..! தென்னிலங்கை அரசியல் தலைவர்கள் கொந்தளிப்பு
மாவீரர்களின் தியாகங்களை நினைவுகூரும் நாளில், புலம்பெயர் தமிழர்களால் ஒழுங்கு செய்யப்பட்டு, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் காணொளியொன்றில் ராஜபக்சர்களின் தற்போதைய நிலை தொடர்பில் வேடிக்கையாகக் காட்டப்பட்டுள்ளது.
இந்தக் காட்சி தென்னிலங்கை அரசியல் வட்டாரங்களில் பெரும் சர்ச்சையாகக் கிளம்பியுள்ளது.
வடக்கு - கிழக்கில் எந்தவித சர்ச்சையும் ஏற்படாமல் மாவீரர் நினைவுத்தினம் முடிவுக்கு வந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் பரவிய ஒற்றைக் காணொளியால் மாவீரர்களின் சொந்தங்களுக்கு அச்சுறுத்தல் வரும் நிலை உருவாகியுள்ளது.
இதுபோன்ற செயல்களைப் புலம்பெயர் நாடுகளில் இருப்பவர்கள் குறைத்துக்கொள்வது, இலங்கையில் வாழும் தமிழ் சொந்தங்களுக்கு நல்லது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, ஊடகவியலாளர் ஒருவரின் படுகொலை தொடர்பில் கோட்டாபய ராஜபக்ச வழங்கிய வாக்குமூலத்திற்கு, மூத்த ஊடகவியலாளர் போதல ஜெயந்த (Poddala Jayantha) எழுதி வெளியிட்ட சமூக வலைத்தளப் பதிவு மூலம் தரமான பதிலடி கொடுத்துள்ளார்.
அவர் வெளியிட்ட பதிவில், அன்றைய காலகட்டத்தில் கோட்டாபய ராஜபக்ச எவ்வாறு நடந்துகொண்டார் என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர், இதுபோன்ற சம்பவங்கள் தற்போது ஏன் உங்களுக்கு நினைவில் இல்லாமல் போனது என்பதற்கும் தெளிவான விளக்கத்தைக் கொடுத்திருக்கிறார்.
இதுபோன்று நாட்டில் கடந்த ஒரு நாளில் நடந்த சுவாரஸ்யமான விடயங்களை உங்கள் பார்வைக்குக் கொண்டுவருகின்றது, News Insight நிகழ்ச்சி,