இஸ்ரேலை தாக்கிய ஈரான் ஏவுகணைகள்! இதுவரையில் மூவர் பலி
தென் இஸ்ரேலில் உள்ள குடியிருப்பு கட்டடத்தில் ஏவுகணை வீழ்ந்ததால் மூவர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று அதிகாலை இஸ்ரேலை நோக்கிய ஈரான் வீசிய ஏவுகணை தாக்குதலிலே இந்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.
மூவர் பலி
தென் இஸ்ரேலின் பியர் ஷேவா (Beer Sheva) நகரில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டடத்தில் ஏவுகணை தாக்கியுள்ளதாக இஸ்ரேலின் அவசர சேவைகள் பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.
மேகன் டேவிட் அடோம் (Magen David Adom – MDA) என்ற அவசர சேவை அமைப்பு கூறுகையில், 40 மற்றும் 20 வயதான ஆண்கள் இருவரும், 30 வயதான பெண் ஒருவருமே பலியாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் இன்னும் ஆறு பேர் காயங்களுடன் சிகிச்சை பெறுகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏவுகணை தாக்குதல்
இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) அது தொடர்பில் தெரிவிக்கையில், “ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள் பாய்ச்சப்பட்டுள்ளன என்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம்.
மக்களை பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளோம்” என குறிப்பிட்டுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 14 ஆம் நாள் மாலை திருவிழா





உடல் உறையும் நிலையில் லொறிக்குள் சிக்கியிருந்த புலம்பெயர்ந்தோர்... சாரதியால் அம்பலமான கொடூரம் News Lankasri

பாட்டியை காணவில்லை, க்ரிஷ் அம்மாவை கண்டுபிடிக்க மீனா சொன்ன விஷயம், சிக்கப்போகும் ரோஹினி... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
