ஈரான் எடுக்கபோகும் அதிரடி முடிவு! உலக நாடுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
ஹார்முஸ் வளைகுடா மூடப்பட்டால் எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் உயரக்கூடும் என்று கோல்ட்மேன் சாக்ஸ் வங்கி கடுமையான எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது.
கோல்ட்மேன் சாக்ஸ் வங்கி நேற்றையதினம்(22) வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தொடர்பில் குறிப்பிட்டுள்ளது.
ஹார்முஸ் நீரிணை
அமெரிக்காவின் தாக்குதலை தொடர்ந்து ஈரான்(Iran) உலக கச்சா எண்ணெய் போக்குவரத்தின் முக்கிய பங்காக உள்ள ஹார்முஸ்(Hormuz) நீரிணையை மூட முடிவு செய்துள்ளது.
உலகம் முழுவதுக்குமான 20% கச்சா எண்ணெய் இந்த நீரிணை வழியேதான் பல்வேறு பகுதிகளுக்கு கப்பலில் கொண்டு செல்லப்படுகின்றது. இது உலகின் மிக முக்கியமான எரிசக்தி வழித்தடங்களில் ஒன்றாகும்.
இந்தநிலையில் ஹார்முஸ் வளைகுடா மூடப்பட்டால் எண்ணெய் போக்குவரத்து ஒரு மாதத்திற்கு 50 சதவீதம் குறைந்து, பின்னர் 11 மாதங்களுக்கு 10 சதவீதம் குறைவாகவே தொடர்ந்தால், Brent crude எண்ணெய் விலை 110 டொலர் வரை உயரும்.
வெளியாகியுள்ள கணிப்பு
2025 ஆம் ஆண்டு 4ஆம் காலாண்டில் சராசரியாக 95 டொலராக நிலைத்திருக்கும் எனக் கோல்ட்மேன் கணித்துள்ளது.
Polymarket எனும் கணிப்பு சந்தை தரவின்படி, ஹார்முஸ் வளைகுடாவை ஈரான் மூட வாய்ப்பு 52சதவீதம் வாய்ப்புள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈரான் பாராளுமன்றம் அந்த முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும், இறுதியான முடிவை ஈரான் தேசிய பாதுகாப்பு மன்றம் எடுக்கும் என சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ஈரான், தினமும் 1.75 மில்லியன் பரல்கள் அளவுக்கு எண்ணெய் வழங்குவதை நிறுத்தினால், 6 மாதங்களில் பிரென்ட் எண்ணெய் விலை பரலுக்கு 90 டொலர் வரை உயரக்கூடும்.
எச்சரிக்கை
பின்னர், 2026ல் 60டொலர் அளவுக்கு வீழும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஈரான் எண்ணெய் வழங்கல் தொடர்ந்து பாதிக்கப்பட்டால், விலை 90டொலராக உயர்ந்து, பின்னர் 70டொலர் - 80டொலராக நிலைத்திருக்கும்.
ஐரோப்பிய சந்தைகளில், TTF எரிவாயு விலை 74 யூரோ/மெகாவாட்-மணிக்கு ($25/MMBtu) வரை உயரலாம் என கோல்ட்மேன் கணித்துள்ளது.
அரசியல் குழப்பங்கள் தொடர்ந்து பெருகும் நிலையில், முதலீட்டாளர்கள் இந்த உலகளாவிய சந்தை நிலவரங்களுக்கு தயாராக இருக்க வேண்டும் என்று கோல்ட்மேன் சாக்ஸ் வங்கி எச்சரித்துள்ளது.





வெளிவந்த மனோகரின் சதி, அப்பாவை தள்ளிவிட்ட கொதித்தெழுந்த நிலா, தரமான சம்பவம்.. அய்யனார் துணை பரபரப்பு எபிசோட் Cineulagam

சரியான சாப்பாடு இல்லாமல் கிழிந்த உடையுடன்.., மாணவர்கள் முன்பு கிரிக்கெட் வீரர் நடராஜன் எமோஷனல் News Lankasri

ஈஸ்வரி குறித்து கொற்றவையிடம் தர்ஷினி கூறிய உண்மை, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam

நடிகர் சூர்யாவின் பிள்ளைகள் தனது Pocket-Money-யை என்ன செய்கிறார்கள்? சித்தப்பா கார்த்தி கூறிய உண்மை Manithan

நடிகை ரம்யா கிருஷ்ணன் மகனா இது, லேட்டஸ்ட் போட்டோ... எங்கே சென்றுள்ளார் பாருங்க, வைரல் போட்டோ Cineulagam
