வன்முறையை தூண்டிய ஜே.வி.பி தலைவர்களை அச்சுறுத்திய மொட்டுக் கட்சி
எமது சகோதரர் அமரகீர்த்தி அத்துக்கோரலவை கொலை செய்வதற்கான வைராக்கியத்தை விதைத்து வன்முறையைத் தூண்டிய ஜே.வி.பியின் முக்கிய தலைவர்கள் இன்று அரசாங்கத்தை வழி நடத்துகின்றனர்.
அவர்களுக்கு எமது அரசாங்கத்தில் தண்டனை வழங்கப்படும் என்று மொட்டுக் கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.
அது மட்டுமல்ல நாடாளுமன்றத்திற்கு தீ வைக்க வேண்டும் என்று பகிரங்கமாக அழைப்பு விடுத்த லால் காந்த போன்றவர்களுக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியில் உரிய சட்ட நடவடிக்கைக எடுக்காததையும் கண்டிக்கிறோம்.
தண்டிக்கப்பட வேண்டியவர்கள் யார்?
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துக்கோரல மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பு குறித்து நடத்திய விசேட ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்திருந்தார். தொடருந்துரையாற்றிய அவர்,
அமரகீர்த்தி அத்துக்கோரல எவ்வித தனிப்பட்ட காரணங்களுக்காகவும் கொல்லப்படவில்லை. அவர் சார்ந்திருந்த அரசியல் கொள்கைக்காகவே வீதியில் வைத்து மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்.

இந்தக் கொலைச் சம்பவத்திற்காக தற்போது 12 இளைஞர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு அவர்களின் எதிர்காலம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், இந்த இளைஞர்களின் மனதில் வன்முறையைத் தூண்டி அவர்களை இந்த நிலைக்குத் தள்ளிய உண்மையான குற்றவாளிகள் இன்னும் தண்டிக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.