அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்
ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த போராட்டங்கள் அமைதியான முறையில் நடைபெற்று வருகின்றன.
மக்கள் போராட்டம்
நாடு முழுவதும் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் லோஸ் ஏஞ்சல்ஸ், ஆஸ்டின், பாஸ்டன், சின்சினாட்டி, சிகாகோ, போர்ட்லேண்ட் மற்றும் வோஷிங்டன், டி.சி. உள்ளிட்ட நகரங்களும் ஈடுபட்டன.
“ட்ரம்ப் ஒரு போர் குற்றவாளி” மற்றும் “ஈரானுக்கு அமெரிக்கா-இஸ்ரேல் போர் வேண்டாம்” என்ற வாசகங்கள் இடப்பட்ட பதாகைகளை ஏந்தி மக்கள் போராட்டங்களில் ஈடுப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 10 நாட்களுக்கு மேலாக தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில் அமெரிக்காவும் இஸ்ரேலுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளது.
ஈரான் பதிலடி
இந்த நிலையில் அமெரிக்காவும் தற்போது ஈரானுக்கு எதிரான நேரடி இராணுவ நடவடிக்கையை முதன் முறையாக தொடங்கி உள்ளது.
அமெரிக்க படைகள் தாக்கியதில் அணு சக்தி தளங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டு உள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். தங்கள் மீது தாக்குதல் நடத்தி இருப்பதால் ஈரான் பதிலடி கொடுக்கும் என்ற சூழ்நிலை நிலவி வருகிறது.
இதனால் அமெரிக்காவில் உள்ள நகரங்கள் அனைத்திலும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டு உள்ளது.
எச்சரிக்கை
உலகம் முழுவதும் உள்ள அமெரிக்க குடிமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அமெரிக்க வெளியுறவு துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேலும் லெபனானில் உள்ள அமெரிக்க துணை தூதரக ஊழியர்கள் வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டு உள்ளது.
இந்நிலையில், ஈரான் மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
you may like this..





நடிகர் சூர்யாவின் பிள்ளைகள் தனது Pocket-Money-யை என்ன செய்கிறார்கள்? சித்தப்பா கார்த்தி கூறிய உண்மை Manithan

வெளிவந்த மனோகரின் சதி, அப்பாவை தள்ளிவிட்ட கொதித்தெழுந்த நிலா, தரமான சம்பவம்.. அய்யனார் துணை பரபரப்பு எபிசோட் Cineulagam

சன் டிவியில் 3 சீரியல்களின் சங்கமம் நடக்கப்போகிறது... எந்தெந்த தொடர்கள் தெரியுமா, ரசிகர்களுக்கு குட் நியூஸ் Cineulagam

ஈஸ்வரி குறித்து கொற்றவையிடம் தர்ஷினி கூறிய உண்மை, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam

கனடா நிலப்பரப்புக்கு அடியில் உறங்கிக்கொண்டிருக்கும் பயங்கர அபாயம்: எச்சரிக்கும் ஆய்வாளர்கள் News Lankasri
