போலி இலக்கத்தகடுகளுடன் பயன்படுத்தப்படும் சொகுசு வாகனங்கள்: வெளியாகியுள்ள தகவல்
போலி இலக்கத்தகடுகள் வைத்து பயன்படுத்தப்பட்ட 2267 சொகுசு வாகனங்களை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
கொழும்பு நகரில் பொருத்தப்பட்டுள்ள பாதுகாப்பு கமராக்கள் ஊடாக போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளை பிடிக்க ஆரம்பிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளில் இந்த வாகனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அடையாளம் காணப்பட்ட வாகன எண்கள்
கமராக்கள் மூலம் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன சாரதிகளை பிடிக்கும் நடவடிக்கை கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. கமராக்கள் மூலம் அடையாளம் காணப்பட்ட வாகன எண்களின் படி, பதிவு செய்யப்பட்ட உரிமையாளர் அடையாளம் காணப்பட்டு, அதற்கான சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
கொழும்பு மாநகரில் உள்ள பாதுகாப்பு கமராக்களில் 12,246 வாகனங்கள் சிக்கியதில், 2267 வாகனங்கள் பதிவு செய்யப்பட்ட உரிமையாளர் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, சட்டவிரோத வாகனங்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளன.
சட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை
சில வாகனங்களின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளர்களை தேடும் போது, அந்த நபர்களுக்கு மோட்டார் சைக்கிள் மட்டுமின்றி, அத்தகைய வாகனத்தை சொந்தமாக வைத்திருக்க வழியில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
இந்த 2267 வாகனங்களும் திருடப்பட்ட வாகனங்களாக சந்தேகிக்கப்படுவதுடன், அந்த வாகன இலக்கங்களை நாடளாவிய ரீதியில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு அனுப்பி சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கை எதிர்வரும் காலங்களில் ஆரம்பிக்கப்படும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |