எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் புதிய அறிவிப்பு
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளை நியமிப்பது தொடர்பாக தேர்தல் ஆணையகம், சிறப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தேர்தல் ஆணையகத்தின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்கவின் அறிவிப்பின்படி, உள்ளூர் அதிகார சபைத் தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தின்படி, வேட்புமனு தாக்கல் காலம் தொடங்குவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்னதாக அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளை நியமிக்க வேண்டும்.
உள்ளூராட்சி மன்றத்தின் தேர்தல் அதிகாரி
அதன்படி, மார்ச் 3 ஆம் திகதி, வேட்புமனு அறிவிப்புகள் வெளியிடப்பட்ட 336 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளால் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கான நியமனக் கடிதங்கள், மார்ச் 14 ஆம் திகதி காலை 8.30 மணிக்கு முன்னர் ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றத்தின் தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

சுயேட்சைக் குழுவின் தலைவர் வைப்புத்தொகை செலுத்தும் போது, அந்தக் குழுவின் வேட்பாளர்களில் ஒருவரை அதன் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியாக நியமிக்க முடியும் என்று தேர்தல் ஆணையகம் கூறுகிறது.
மார்ச் 13 ஆம் திகதி, பூரணைத் தினமாக இருந்தாலும், தேர்தல் ஆணையகத்தின் தலைமை அலுவலகம் மற்றும் அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலகங்களும் திறந்திருக்கும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அணையா விடுதலைத்தீ சங்கரின் சாவு எப்படி வீரசரித்திரமானது.. 10 மணி நேரம் முன்
விசா நிராகரிப்பால் உயிரைவிட்ட இந்திய மருத்துவர்! சிதைந்த அமெரிக்க கனவு..சிக்கிய கடிதம் News Lankasri
மரணத்தைக் கண்டேன்..இயேசுவை சந்தித்த பின் காப்பாற்றப்பட்டேன் - ஐரிஷ் வீரரின் பதிவு வைரல் News Lankasri
சரிகமப சீசன் 5 போட்டியாளர் சின்னு செந்தமிழனுக்கு இப்படியொரு வாய்ப்பா?... வேறலெவல் சர்ப்ரைஸ் Cineulagam
பள்ளி செல்லும் அகதிப் பிள்ளைகளை தங்கள் நாட்டுக்கு போகும்படி கூறுவதால் உருவாகியுள்ள கலக்கம் News Lankasri