யாழ். திருநெல்வேலியில் பல்பொருள் அங்காடி உரிமையாளருக்கு 150, 000 ரூபா தண்டம்
யாழ்ப்பாணம்(Jaffna) - திருநெல்வேலி பகுதியில் உள்ள பிரபல பல்பொருள் அங்காடி உரிமையாளர் ஒருவருக்கு யாழ். நீதிமன்றத்தினால் 150,000 ரூபா தண்டமாக விதிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவன் தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர் குழுவினால் கடந்த பெப்ரவரி மாதம் திருநெல்வேலி பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
உரிமையாளருக்கு எதிராக 20 குற்றச்சாட்டுகள்
இதன்போது காலாவதியான பொருட்கள், உரிய முறையில் சுட்டுத்துண்டு இடப்படாத பொருட்கள், வண்டுகள் மொய்த்து பழுதடைந்த பொருட்கள் என்பவற்றை விற்பனைக்காக வைத்திருந்த பல்பொருள் அங்காடி உரிமையாளர் இனங்காணப்பட்டுள்ளார்.
இதனையடுத்து பல்பொருள் அங்காடி உரிமையாளருக்கு எதிராக 20 குற்றச்சாட்டுகளுடன் யாழ். மேலதிக நீதவான் நீதிமன்றில் 18 ஆம் திகதி பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழக்கினை இன்றையதினம் (07) விசாரணைக்கு எடுத்துகொண்ட மேலதிக நீதவான் செ. லெனின்குமார் பல்பொருள் அங்காடி உரிமையாளரை குற்றவாளியாக இனங்கண்டு 150, 000 ரூபா தண்டம் விதித்ததுடன் உரிமையாளரிற்கு கடுமையான எச்சரிக்கையும் வழங்கியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 20 மணி நேரம் முன்

Super Singer: சூப்பர் சிங்கரில் நடுவர் கொடுத்த இன்ப அதிர்ச்சி... யாருக்கெல்லாம் வாய்ப்பு கிடைத்தது? Manithan

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam
