பிறந்து10 நாட்களேயான பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு - அவசர பிரேத பரிசோதனைக்கு உத்தரவு
பிறந்து10 நாட்களேயான பெண் குழந்தையொன்று தொண்டையில் கல் சிக்கியதால் மூச்சுத்திணறி பதுளை பொது வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.
தாய் குழந்தையை குளிப்பாட்டிவிட்டு தூங்கவைக்க தயாரான போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
குழந்தையின் தொண்டையில் இருந்து இரத்தம் வடிந்த நிலையில், உடனடியாக வெலிமட அடிவார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.
அறுவை சிகிச்சை
அங்கு அறுவை சிகிச்சை மூலம் கல் அகற்றப்பட்ட நிலையில் பின்னர், அக்குழந்தை உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

மனநோயால் பாதிக்கப்பட்டிருந்த அக்குழந்தையின் தாயும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், நீதிமன்றத்தில் மரணம் குறித்து தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, நீதிபதியின் உத்தரவின் பேரில் அவசர பிரேதப் பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரிலிருந்து மீண்டும் நாடு திரும்புவதில் ஷிரந்தி ராஜபக்சவிற்கு சிக்கல் - FCIDக்கு அவசர கடிதம்