சிங்கப்பூரிலிருந்து மீண்டும் நாடு திரும்புவதில் ஷிரந்தி ராஜபக்சவிற்கு சிக்கல் - FCIDக்கு அவசர கடிதம்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச கண் அறுவை சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றுள்ளதாகவும், அவர் தனது பணிகளை முடித்துக்கொண்டு இலங்கை திரும்பியவுடன் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன் முன்னிலையாவார் என அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பொலிஸ் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு (FCID)கடிதம் அனுப்பியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
தற்போதைய உடல்நிலை
பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவால் அவருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தாலும், அவரது தற்போதைய உடல்நிலை காரணமாக அவரால் முன்னிலையாக இயலாது என்றும் சட்டத்தரணி கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.

ஷிரந்தி ராஜபக்ச, 'சிரிலிய சவிய' அறக்கட்டளை நிதி முறைகேடு தொடர்பான விசாரணைக்காக நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) வாக்குமூலம் பதிவு செய்வதற்காக முன்னிலையாகுமாறு 16ஆம் திகதி அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றுள்ளதால் வேறு திகதியை வழங்குமாறு கோரியிருந்தார்.
இந்நிலையில், ஷிரந்தி ராஜபக்ச கண் அறுவை சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றுள்ளதாகவும், அவர் தனது பணிகளை முடித்துக்கொண்டு இலங்கை திரும்பியவுடன் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன் முன்னிலையாவார் என அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.