பத்தேகம துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழப்பு - தீவிர சிகிச்சையில் மற்றுமொரு பெண்
புதிய இணைப்பு
பத்தேகம, ஹல்பேதொட பகுதியில் முச்சக்கர வண்டியில் பயணித்தவர்கள் மீது இன்று (27) காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தத துப்பாக்கிச்சூட்டில் முச்சக்கர வண்டியின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த இரண்டு பெண்களில் ஒருவர் பத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண் அம்பலங்கொடை பகுதியை சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது.
காயமடைந்த மற்றொரு பெண் மேலதிக சிகிச்சைக்காக காலி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று வைத்தியசாலை செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த பெண், பத்தேகமவில் உள்ள காலி குற்றப்பிரிவில் கையெழுத்து போட்டு விட்டு திரும்பிக்கொண்டிருந்தபோது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
டி-56 ரக துப்பாக்கியால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இரண்டாம் இணைப்பு
பத்தேகம, ஹல்பேதொட பகுதியில் முச்சக்கர வண்டியில் பயணித்தவர்கள் மீது இன்று (27) காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முச்சக்கர வண்டியில் பயணித்தவர்கள் மீது காரில் வந்த குழுவினரால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கிச்சூட்டில் முச்சக்கர வண்டி சாரதி மற்றும் இரண்டு பெண்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் ஆண் , ஒருவர் உயிரிழந்துள்ளார்.
முதலாம் இணைப்பு
காலி - பத்தேகம, ஹல்பேதொட பகுதியில் துப்பாக்கிச்சூடு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
இன்று (27) காலை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸார் விசாரணை
காரொன்றில் வந்த குழுவினர் வீட்டின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.