தேவையற்ற சூழ்நிலைக்குள் சிக்கியிருக்கும் நாமல்! எதிர்காலம் குறித்து வெளியான தகவல்
தேவையற்ற சூழலில் சிக்குண்டு சிறையில் இருக்கும் நாமல் ராஜபக்சவுக்கு மிகப் பெரிய எதிர்காலம் உண்டு என்று பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்த தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
தற்போதைய நிலையில் நாட்டில் புதிய ஜனாதிபதி ஒருவரை உருவாக்க வேண்டிய தேவை எமக்குக் கிடையாது.
எதிர்க்கட்சிக்கு ஒத்துழைப்பு
நாட்டின் தற்போதைய ஜனாதிபதிக்கு இன்னும் கால அவகாசம் உண்டு. இந்த அரசாங்கத்திற்கு இன்னும் கால அவகாசம் இருக்கின்றது.
ஆனால், எதிர்க்கட்சியாக அனைத்து எதிர்க்கட்சி குழுக்களம் வலுப்பெறுவது மிகவும் முக்கியமானது. அதற்குத் தேவையான தலைமைத்துவத்தையும், தேவையான ஒத்துழைப்பையும் நாங்கள் வழங்குவோம்.

ஒரு கட்சியின் உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிப்பதை விட, எதிர்க்கட்சியை வலுப்படுத்தும் செயல்முறைக்கு எங்களால் முடிந்த பங்களிப்பை வழங்குவதையே நாம் எதிர்பார்க்கின்றோம்.
மறுபுறம், தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்சவுக்கு மிகப்பெரிய எதிர்காலம் உண்டு. தற்போது, அவர் தேவையற்ற ஒரு சூழ்நிலையால் சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றார்.
ஆனால், அவருக்கு மிகப்பெரிய அரசியல் எதிர்காலம் உண்டு என குறிப்பிட்டுள்ளார்.