லண்டன் மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானம்: ரஷ்யாவின் கடுமையான பதில்
பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) உள்ளிட்ட ஐரோப்பிய தலைவர்கள் உக்ரைன் தொடர்பில், லண்டனில் எடுத்துள்ள தீர்மானத்திற்கு ரஷ்யா கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) கெய்ர் ஸ்டார்மர் மற்றும் பிற மேற்கத்தேய தலைவர்களைச் சந்தித்தார்.
ஓவலில் உள்ள வெள்ளை மாளிகையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஜெலென்ஸ்கி இடையே இடம்பெற்ற முரண்பாடான சந்திப்பிற்கு பிறகு இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
அமைதித் திட்டம்
இதன்போது, உக்ரைனுக்கான அமைதித் திட்டத்தை இறுதி செய்ய ஐரோப்பியத் தலைவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
அத்துடன் ஸ்டார்மர், பிரித்தானியா, உக்ரைன், பிரான்ஸ் மற்றும் வேறு சில ஒத்த கருத்துள்ள நாடுகளின் கூட்டணியை உருவாக்கி, ட்ரம்பிடம் எடுத்துச் செல்ல ஒரு அமைதித் திட்டத்தை வகுக்க இருப்பதாக குறிப்பிட்டார்.
இந்நிலையில், ரஷ்ய ஜனாதிபதி மாளிகையின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், உக்ரைனுக்கான ஐரோப்பியத் தலைவர்களின் மேலதிக நிதியுதவியும் பிரித்தானியாவின் 5,000 ஏவுகணையும் போரை இன்னும் நீட்டிகும் என்பதில் சந்தேகம் இல்லை என தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப் - ஜெலென்ஸ்கி சந்திப்பு
மேலும் "இந்த தீர்மானம், அமைதிக்கான திட்டம் அல்ல என்பது உறுதியாகிறது. போரை முன்னெடுத்துச் செல்வதற்கான வாக்குறுதியாகவே பார்க்க வேண்டும். சமாதானத்திற்கான எந்தவொரு ஆக்கபூர்வமான முயற்சிகளும் தற்போதைய தேவையாக உள்ளது.
தனது நிலைப்பாட்டை மாற்ற யாராவது ஜெலென்ஸ்கியை கட்டாயப்படுத்துவது மிகவும் முக்கியம். உக்ரைனில் அமைதி திரும்புவதை ஜெலென்ஸ்கி விரும்பவில்லை, அவரை எவரேனும் அதற்கு கட்டாயப்படுத்த வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
அத்துடன், ட்ரம்ப் மற்றும் ஜெலென்ஸ்கியின் கருத்து மோதல் ஏற்படுத்தியுள்ள கடுமையான பின்னடைவை சீர்செய்ய, ஐரோப்பியத் தலைவர்கள் கடுமையாக போராட வேண்டியிருக்கும் என்றே டிமிட்ரி பெஸ்கோவ் எச்சரித்துள்ளார்.
இதற்கிடையில், தம்மால் ட்ரம்புடன் மீண்டும் ஒரு பேச்சுவார்த்தையை முன்னெடுக்க முடியும் என்றும், அது இரு தலைவர்களுக்கும் மட்டுமான ஒரு சந்திப்பாக இருக்க வேண்டும் என்றும் ஜெலென்ஸ்கி கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

SBI Gold Deposit Scheme.., ரூ.10 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை 5 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்தால் எவ்வளவு தொகை கிடைக்கும்? News Lankasri

பெரும் கோடீஸ்வரரின் மகள்... ரூ 48 பில்லியன் சாம்ராஜ்யத்தின் வாரிசு: கணவர் திரைப்பட நட்சத்திரம் News Lankasri

பிளஸ் -2 தேர்வெழுத தவறான தேர்வு மையத்திற்கு வந்த மாணவிகள்.., சரியான நேரத்தில் உதவிய கல்வி அலுவலர் News Lankasri

ஆரம்பமாகும் ராகு கேது பெயர்ச்சி: இனி 1 1/2 வருடத்திற்கு இந்த ராசிகள் எச்சரிகையுடன் இருங்கள் Manithan
