உக்ரைனில் போர் நிறுத்தத்துக்கு வழிவகைகளை ஆராயும் ஐரோப்பிய நாடுகள்
உக்ரைனில், சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு வழி வகுக்கும் ஒரு மாத கால ஆரம்ப போர் நிறுத்தத்திற்கான திட்டத்தை பிரான்ஸ் முன்வைத்துள்ளது.
இதனையடுத்து, உக்ரைன் போர் நிறுத்தத்திற்கான சாத்தியமான பல திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக பிரித்தானியா கூறியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி ஆகியோருக்கு இடையே கடந்த வாரம் ஓவல் அலுவலகத்தில் ஏற்பட்ட விரிசலுக்குப் பிறகு, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் தலைமையிலான ஐரோப்பிய நாடுகள், உக்ரைன் உட்பட ஒரு அமைதித் திட்டத்திற்கான விருப்பங்களைப் பரிசீலித்து வருகின்றன.
வெளிப்படையான பாதுகாப்பு
மேசையில் பல விருப்பங்கள் தெளிவாக உள்ளதாக பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார். போர் நிறுத்தம் ஏற்பட்டால் உக்ரைனுக்கு துருப்புக்களை அனுப்ப பிரான்ஸ், பிரித்தானியா மற்றும் பிற ஐரோப்பிய நாடுகள் முன்வந்துள்ளன.
ஆனால், அமெரிக்காவின் ஆதரவும் இந்த திட்டத்துக்கு கோரிப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், உக்ரைனை ஆக்கிரமித்து அதன் நிலப்பரப்பில் சுமார் 20% ஐக் கைப்பற்றிய ரஷ்யா, மீண்டும் தாக்குதல் நடத்தாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, மேற்கத்திய நாடுகளின் வெளிப்படையான பாதுகாப்பு உத்தரவாதங்களுடன் ஒரு போர் நிறுத்தம் வர வேண்டும் என்று செலென்ஸ்கி கூறுகிறார்.
எனினும் டிரம்ப் அத்தகைய உத்தரவாதங்களை வழங்க மறுத்துவிட்டார்.
பொது ஒப்புதல்
இந்தநிலையில், ஸ்டார்மர் நேற்று ஞாயிற்றுக்கிழமை லண்டனில் ஐரோப்பிய தலைவர்களின் உச்சிமாநாட்டை நடத்தினார்.
அத்துடன், அமெரிக்காவுக்கு வழங்குவதற்காக உக்ரைன் அமைதித் திட்டத்தை வகுக்க ஐரோப்பிய தலைவர்கள் ஒப்புக்கொண்டதாககவும் அவர் கூறியுள்ளார்.

உச்சிமாநாட்டிற்குச் செல்லும் வழியில் வழங்கப்பட்ட ஒரு நேர்காணலில், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஒரு மாத போர் நிறுத்தத்திற்கான சாத்தியத்தை எழுப்பினார்.
இருப்பினும், இதுவரை மற்ற நட்பு நாடுகளிடமிருந்து, இதற்கான பொது ஒப்புதல் எதுவும் இல்லை.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam