மட்டக்களப்பில் வாள்வெட்டு தாக்குதல்: ஒருவர் படுகாயம்
மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
சற்று முன்னர் இடம்பெற்ற இந்த வாள்வெட்டு தாக்குதலை 10 பேர் கொண்ட குழுவினர் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
படுகாயமடைந்தவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதுடன் குறித்த பகுதிக்கு சென்ற பொலிஸார், புலனாய்வுத்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
ஆரம்பக்கட்ட விசாரணை
இரண்டு மரக்கறி வியாபாரிகளுக்கு இடையில் ஏற்பட்டிருந்த முரண்பாடே வாள்வெட்டுத் தாக்குதலுக்கு காரணம் என ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பகுதிக்கு சென்று மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடவியல் பிரிவு பொறுப்பதிகாரி கே.ரவிச்சந்திரன் தலைமையிலான பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இன்று ஆரையம்பதி பகுதியில் வாள்வெட்டுக் குழுக்களை கட்டுப்படுத்துமாறு ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்ட நிலையில், இன்று மாலை மட்டக்களப்பு நகருக்குள் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
