கல்லால் கொடூரமாகத் தாக்கப்பட்டு மூதாட்டி படுகொலை!
கேகாலை (Kegalle) - திவுல பிரதேசத்தில் கல்லால் கொடூரமாகத் தாக்கப்பட்டு மூதாட்டி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த மூதாட்டி கல்லால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில், கேகாலை போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த பின்னர் நேற்று (2) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில், அதே பிரதேசத்தைச் சேர்ந்த 80 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
காணித் தகராறு காரணமாக இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அத்தோடு, இந்தச் சம்பவம் தொடர்பில் கேகாலை பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ரஷ்ய நிலநடுக்கத்தின் எதிரொலி! பாறை சரிவிலிருந்து கடல் சிங்கங்கள் தப்பிக்கும் திகில் காட்சி! News Lankasri

ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் ரஜினியின் கூலி.. இதுவரை செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
