பண்டிகைக் காலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
பண்டிகைக் காலத்தில் தட்டுப்பாடு இன்றி அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
வர்த்தகத்தரப்புடன் கலந்துரையாடி குறைந்த விலையில் பொருட்களை விற்பனை செய்ய தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உணவு பாதுகாப்பு
நாட்டுக்குள் உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக தொகை சேகரிப்பு மற்றும் ஏனைய நடவடிக்கைகள் குறித்தும் மீளாய்வு செய்யப்பட்டுள்ளது.
நுகர்வோரும்,விவசாயிகளும், உற்பத்தியாளர்களும் பாதுகாக்கப்படும் வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டியதன் அவசியமும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த மாதம் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலையை லங்கா சதொச நிறுவனம் குறைத்திருந்தது.
அத்தியாவசிய பொருட்களின் விநியோகம்
அத்துடன் வாடிக்கையாளர்கள் நாடு முழுவதும் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் இந்தப் பொருட்களைப் பெற முடியும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கமைய நிலக்கடலை, சிவப்பு சீனி, உருளைக்கிழங்கு(இறக்குமதி செய்யப்பட்டது), சிவப்பு கௌபி, காய்ந்த மிளகாய்,பாஸ்மதி அரிசி, பெரிய வெங்காயம், பருப்பு, வெள்ளை சீனி மற்றும் நெத்தலியின் விலை என்பன குறைக்கப்பட்டிருந்தன.
இவ்வாறு அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்ததை தொடர்ந்து தற்போது பண்டிகைக் காலத்தில் தட்டுப்பாடு இன்றி அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam
