யாழில் உழவு இயந்திரத்தினுள் சிக்குண்டு சிறுவன் பரிதாப மரணம்!
யாழ்ப்பாணம் (Jaffna)- சுன்னாகம் பகுதியில் உழவு இயந்திரத்தினுள் சிக்குண்டு சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது இன்று (3) மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் , சுன்னாகம் ஸ்கந்தவரோதயா பாடசாலையில் கல்வி கற்கும் 11 வயதுடைய நிகால்தாசன் ஆத்வீகன் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
இது குறித்து மேலும் தெரியவருவதாவது, இன்று மாலை உயிரிழந்த சிறுவனின் தந்தை வீட்டிலிருந்து உழவு இயந்திரத்தினை பின் வளமாக வெளியே எடுக்க முயன்றுள்ளார்.
இதன்போது, குறித்த சிறுவன் பின்னிருப்பதை கவனிக்காது உழவு இயந்திரத்தினை எடுத்த போது அதனுள் சிக்கி சிறுவன் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த சிறுவனின் சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் ,சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமலையில் துறைமுக அதிகார சபையினர் மக்கள் குடியிருப்புக்குள் நில அளவை மேற்கொள்ள முயற்சித்ததால் பரபரப்பு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

எந்த விடயத்திலும் perfection பார்க்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

நடிகர் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு- இதெல்லாம் நடக்க காரணம் இவர்தானா? Manithan

ஆரம்பமாகும் ராகு கேது பெயர்ச்சி: இனி 1 1/2 வருடத்திற்கு இந்த ராசிகள் எச்சரிகையுடன் இருங்கள் Manithan

பெரும் கோடீஸ்வரரின் மகள்... ரூ 48 பில்லியன் சாம்ராஜ்யத்தின் வாரிசு: கணவர் திரைப்பட நட்சத்திரம் News Lankasri
