ஒட்டுக்குழுக்களுடன் இணைந்து தமிழ்த் தேசியத்தை விட்டுக்கொடுக்கோம் - ஈ.சரவணபவான்
ஒட்டுக்குழுக்களோடு இணைந்து தமிழ்த் தேசியத்தை ஒருபோதும் விட்டுக்கொடுக்கோம். தேசியத்தின் பாதையில் தனித்து எமது அரசியல் பயணம் தொடரும் என சனநாயகத் தமிழரசுக் கட்சியின் தேசிய ஒருங்கிணப்பாளர் ஈ.சரவணபவான் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சித் தேர்தலில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் சார்பில் சங்குச் சின்னத்தில் சனநாயகத் தமிழரசுக் கட்சி போட்டியிடப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அது தொடர்பில் புலம்பெயர் ஊடகமொன்றுக்கு வழங்கிய பேட்டியில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“ நாங்கள் ஒருபோதும் தமிழர்களின் உரிமைகளையும் தேசியத்தையும் விட்டுக் கொடுக்க மாட்டோம். விடுதலை புலிகளின் தலைவர் கூட்டமைப்பை உருவாக்கியபோது அதில் ஒட்டுக்குழுக்களை இணைப்பதில் தயக்கம் காட்டியிருந்தார்.
தமிழ்த்தேசியக் கட்சிகள்
இருப்பினும் அந்தச் சமயத்தில் தம் தவறை உணர்ந்த ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலோ ஆகிய கட்சிகளை மட்டுமே கூட்டமைப்புக்குள் இணைத்தனர். 2009க்குப் பின்னர் தான் புளொட் கூட்டமைப்பில் இணைந்தது.
தமிழீழ விடுதலை புலிகள் இருந்திருந்தால் ஒருபோதும் புளொட் கூட்டமைப்புக்குள் வந்திருக்க முடியாது. இப்போது புளொட்டும், மண்டையன் குழுவும் தாம் இப்போதும் ஒட்டுக்குழுக்கள் தான் என்பதை உறுதிப்படுத்தியுள்ளன.
எம்மைப் போன்ற தமிழ்த்தேசியக் கட்சிகளுடன் பேச்சு நடத்தியவாறு பின்கதவால், ஈபிடிபியில் இருந்து பிரிந்து சென்று போர்க்குற்றவாளி மகிந்தவை நியாயப்படுத்திய சந்திரகுமாரின் கட்சி, சிறிரெலோ போன்ற மக்கள் விரோத சக்திகளை இந்தக் கூட்டுக்குள் இணைத்துள்ளனர்.
இப்படி மக்களின் இரத்ததைக் குடித்தவர்கள் இருக்கும் கூட்டணியில் நாம் இணைய முடியாது. அதனால் இந்த ஒட்டுக்குழுக்களோடு இணையாமல் தனித்தே உள்ளூராட்சித் தேர்தலில் களமிறங்குவோம். இளைஞர்கள் எங்கள் பின்னால் வர தயாராக இருக்கின்றனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பிளஸ் -2 தேர்வெழுத தவறான தேர்வு மையத்திற்கு வந்த மாணவிகள்.., சரியான நேரத்தில் உதவிய கல்வி அலுவலர் News Lankasri

SBI Gold Deposit Scheme.., ரூ.10 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை 5 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்தால் எவ்வளவு தொகை கிடைக்கும்? News Lankasri

பெரும் கோடீஸ்வரரின் மகள்... ரூ 48 பில்லியன் சாம்ராஜ்யத்தின் வாரிசு: கணவர் திரைப்பட நட்சத்திரம் News Lankasri
