வவுனியாவில் உணவகம் ஒன்றின் மீது தாக்குதல்: ஒருவர் கைது
வவுனியா நகரப் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தியதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று(03.03.2025) இரவு இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா நகர மணிக்கூட்டு கோபுரத்திற்கு அண்மையில் உள்ள சைவ உணவகம் ஒன்றிற்கு சில இளைஞர்கள் சென்றுள்ளனர்.
மேலதிக விசாரணை
இதன்போது, அதில் ஒரு இளைஞர் கையில் கொண்டு சென்ற பியர் போத்தலால் குறித்த சைவ உணவகத்தின் கண்ணாடிக் பெட்டியின் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
இதனால் கண்ணாடி பெட்டி உடைந்து சேதமடைந்துள்ளது. சம்பவம் தொடர்பில் உணவக உரிமையாளர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து அங்கு வந்த வவுனியா பொலிசார் ஒருவரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரை மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பெரும் கோடீஸ்வரரின் மகள்... ரூ 48 பில்லியன் சாம்ராஜ்யத்தின் வாரிசு: கணவர் திரைப்பட நட்சத்திரம் News Lankasri

பிளஸ் -2 தேர்வெழுத தவறான தேர்வு மையத்திற்கு வந்த மாணவிகள்.., சரியான நேரத்தில் உதவிய கல்வி அலுவலர் News Lankasri

நடிகர் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு- இதெல்லாம் நடக்க காரணம் இவர்தானா? Manithan
