கனடாவின் குறைந்தபட்ச ஊதியத்தில் உயர்வு
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 01ஆம் திகதி முதல் கனடாவின் குறைந்தப்பட்ச ஊதியம் அதிகரிக்கப்படவுள்ளது.
இதன்படி, கூட்டாட்சி கட்டுப்பாட்டில் உள்ள வங்கி, விமான சேவை, ரயில் நிறுவனங்கள் உள்ளிட்ட துறைகளில் பணிபுரிபவர்களின் சம்பளத்தை $17.75 ஆக உயர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த பணியாளர்களுக்கு தற்போது, $17.30 ஊதியமாக வழங்கப்படுகின்றது. இது தற்போது 2.4 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
வருமான சமநிலை
கனடாவில் அதிகரித்துள்ள வாழக்கை செலவை ஈடுகட்டும் முகமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக 'Employment and Social Development Canada' தெரிவித்துள்ளது.
இதேவேளை, குறித்த ஊதிய உயர்வு, தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் வருமான சமநிலையை ஏற்படுத்தவும் உதவும் என கனடாவின் வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு அமைச்சர் ஸ்டீவன் மக்கின்னான் (Steven MacKinnon) குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பிளஸ் -2 தேர்வெழுத தவறான தேர்வு மையத்திற்கு வந்த மாணவிகள்.., சரியான நேரத்தில் உதவிய கல்வி அலுவலர் News Lankasri

எந்த விடயத்திலும் perfection பார்க்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
