அச்சத்தில் சுகயீனமடையும் அரசியல்வாதிகள்! இழுப்பறியில் விசாரணைகள்..
ஊழலை ஒழிப்போம் என்று ஆட்சிப்பீடமேறிய அநுர அரசாங்கம் கடந்தகாலத்தில் இடம்பெற்றுள்ள ஊழல் மோசடிகளை எப்போது வெளிக்கொண்ட வருவார்கள், எப்போது விசாரணை நடைபெறும் என்பது அனைவரது எதிர்ப்பார்ப்பாக உள்ளது.
இந்தநிலையில்,இலங்கையில் பல அரசியல்வாதிகள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் விசாரணைக்கு அழைக்கப்படும் போது நோயாளிகளாக மாறுவதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அதாவது, அவர்கள் தொடர்பான விசாரணைக்கு அழைக்கும் போது மருத்துவ அறிக்கைகளை காரணம் காட்டி 2, 3 வாரங்கள் அவகாசம் கோருகின்றனர். அதனை தொடர்ந்து பல தயார்படுத்தல்களுடன் வருகை தருகின்றார்கள், அதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு வேறு விதமாக கருத்துக்களை தெரிவிக்கின்றனர் என்று அவர் தெரிவித்திருந்தார்.
நேற்றுமுன்தினம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மனைவி மைத்திரிவிக்ரமசிங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டார்.
ஆனால் அவர் அதற்கு முன்தினமே தனக்கு சுகவீனம் காரணமாக 2 வார கால அவகாசம் வேண்டும் என்று கடிதம் வழங்கியுள்ளார்.
ஆனால் சாமானியர்கள் இவ்வாறு அழைக்கப்பட்டார்கள் என்றால் இவ்வாறு கூற முடியுமா? ஆனால் அரசியல்வாதிகள் இவ்வாறு காரணம் கூறுகிறார்கள்.
நாமல் ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச, பசில் ராஜபக்ச, சிரந்தி ராஜபக்ச ஆகியோர் பல முறை இவ்வாறு செய்துள்ளார்கள். இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது லங்காசிறியின் NewsInsight நிகழ்ச்சி...