மட்டக்களப்பில் வெடிப்புச்சம்பவம்: இளைஞர் ஒருவர் படுகாயம்
மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி கடற்பகுதியில் மிதந்து வந்த பொருளை திறந்து பார்க்க முற்பட்ட போது இடம்பெற்ற வெடிச்சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
நேற்று மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் ஆரையம்பதி, திருநீற்றுக்கேணி பகுதியை சேர்ந்த 23வயதுடைய வரதராஜன் என்னும் இளைஞனே படுகாயமடைந்துள்ளார்.
மேலதிக சிகிச்சை
இவர் ஆரையம்பதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
நான்கு இளைஞர்கள் கடலில் குளித்துக் கொண்டிருந்த போது குறித்த பொருள் கடலில் மிதந்து வந்த நிலையில் அதனை திறக்க முற்பட்ட போதே வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு சென்ற பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




பெரும் கோடீஸ்வரரின் மகள்... ரூ 48 பில்லியன் சாம்ராஜ்யத்தின் வாரிசு: கணவர் திரைப்பட நட்சத்திரம் News Lankasri

SBI Gold Deposit Scheme.., ரூ.10 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை 5 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்தால் எவ்வளவு தொகை கிடைக்கும்? News Lankasri
