யுத்தத்தின் போது இலங்கையிலிருந்து தப்பி வெளிநாடு சென்றவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
தற்போதுள்ள குடிவரவு, குடியகல்வு சட்டத்தின் சில நிபந்தனைகளை மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவிய உள்நாட்டு யுத்தத்தின் காரணமாக முறையற்ற வகையில் வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள் மீண்டும் தாயகம் திரும்பும் போது எவ்வித இடையூறுகளுமின்றி நாட்டுக்குள் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
சட்ட மா அதிபரின் பரிந்துரைகள்
அவர் மேலும் தெரிவிக்கையில், சட்டத்தில் உள்ள நிபந்தனைகளில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பில் சட்ட மாஅதிபரின் பரிந்துரைகள் கோரப்பட்டுள்ளன. சட்ட மாஅதிபரின் பரிந்துரைகளுக்கு அமைய, உரிய சட்ட நடவடிக்கைகளைப் பின்பற்றி, அவற்றை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
மத்திய கிழக்கில் திக் திக் நிமிடங்கள் - வெனிசுலாவை விட பெரிய தாக்குதல்! ஈரானுக்கு ட்ரம்பின் பகிரங்க மிரட்டல்

இந்த விடயம் தொடர்பில் ஏற்கனவே அமைச்சரவைக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், சட்டத்தில் உள்ள நிபந்தனைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர், தாயகம் திரும்பும் இலங்கையர்களை எவ்வித இடையூறுகளுமின்றி, நாட்டுக்குள் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
எவ்வாறாயினும், நாடு திரும்புவோர், போர்க்காலச் சூழலில் நாட்டிலிருந்து சென்று, தாம் ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பின் கீழ் வசித்தமைக்கான சான்றுப்பத்திரங்களை சமர்ப்பிப்பது கட்டாயமானது என சுட்டிக்காட்டியுள்ளார்.
you may like this video..
வசூல் வேட்டையில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' திரைப்படம்.. 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
கடக ராசியில் வக்ர பெயர்ச்சியடையும் புதன் : இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
உலக கோப்பை கால்பந்து: போட்டிக்கு பிறகு உடை மாற்றும் அறையில் ஈரான் வீரர்கள் விட்டுச் சென்ற கடிதம் News Lankasri