மத்திய கிழக்கில் திக் திக் நிமிடங்கள் - வெனிசுலாவை விட பெரிய தாக்குதல்! ஈரானுக்கு ட்ரம்பின் பகிரங்க மிரட்டல்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானின் அணு திட்டம் தொடர்பான உடன்படிக்கைக்கு வரத் தவறினால், கடந்த ஆறு மாதங்களுக்கு முன் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை விடவும் மிகப் பெரிய இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“நேரம் வேகமாக முடிவடைகிறது. உடனடியாக ஒப்பந்தம் செய்ய வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல்–ஈரான் போர்
கடந்த ஜூன் மாதத்தில் 12 நாட்கள் நடந்த இஸ்ரேல்–ஈரான் போரின் போது, அமெரிக்க ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானங்கள் ரகசியமாக தாக்குதல் நடத்தி, ஈரானின் நிலத்தடியில் உள்ள அணு நிலையங்களை குறிவைத்ததாக ட்ரம்ப் நினைவூட்டியுள்ளார்.

அடுத்த தாக்குதல் அதைவிட பல மடங்கு கடுமையாக இருக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
ஈரானில் அரசுக்கு எதிராக நடந்த போராட்டங்களை பாதுகாப்புப் படைகள் கடுமையாக ஒடுக்கியதில், பத்தாயிரக்கணக்கானோர் உயிரிழந்திருக்கலாம் என்ற தகவல்களால் உலக நாடுகள் அதிர்ச்சியடைந்துள்ளன.
இதன் பின்னணியில், அமெரிக்கா ஈரானுக்கு எதிராக தாக்குதல் நடத்துமா என்ற கேள்வி கடந்த சில வாரங்களாக எழுந்து வந்தது.
ட்ரம்ப் எச்சரிக்கை
இந்த நிலையில், மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கு அமெரிக்க கடற்படை விமான தாங்கிக் கப்பல் குழு அனுப்பப்பட்டுள்ளது. இதை ட்ரம்ப், “ஒரு மிகப்பெரிய கடற்படை அணிவகுப்பு” என குறிப்பிட்டார்.
‘ஆபிரகாம் லிங்கன்’ விமான தாங்கிக் கப்பல் தலைமையிலான இந்த படை, வெனிசுவேலாவிற்கு அனுப்பப்பட்ட படையை விடவும் பெரியது என்றும், தேவையெனில் வேகம் மற்றும் வன்முறையுடன் நடவடிக்கை எடுக்க தயாராக இருப்பதாகவும் அவர் Truth Social பதிவில் தெரிவித்துள்ளார்.
மேலும், “ஈரான் உடனடியாக பேச்சுவார்த்தைக்கு வந்து, அணு ஆயுதங்கள் இல்லாத ஒப்பந்தத்தை ஏற்க வேண்டும்” எனவும் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கு பதிலளித்த ஈரானின் ஐ.நா. தூதரகம், “பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் பேச்சுவார்த்தைக்கு ஈரான் தயாராக உள்ளது. ஆனால் தூண்டப்பட்டால், தன்னை பாதுகாப்பதில் எந்த தயக்கமும் இருக்காது” என X தளத்தில் தெரிவித்துள்ளது.
நிலா என் ஆளு, பத்திரமா கூட்டிட்டு போ, சோழனிடம் கூறிய ராகவ், அடுத்து நடந்தது?... அய்யனார் துணை சீரியல் Cineulagam