இஷாரா செவ்வந்தி தொடர்பில் இந்திய பொலிஸாரிடம் கோரிக்கை
கணேமுல்லை சஞ்சீவ கொலைவழக்கின் பிரதான சூத்திரதாரியான இஷாரா செவ்வந்தி, இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டும் தப்பிச் செல்லாதவாறு அனைத்து வழிகளும் மூடப்பட்டு, கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
தீவிர நடவடிக்கை
எனினும், அவர், படகு மூலம் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் தற்போது விசாரணையாளர்களுக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து இந்திய அதிகாரிகளுக்கு இஷாரா செவ்வந்தி தொடர்பான விபரங்கள் வழங்கப்பட்டு, அவரைக் கைது செய்து நாடு கடத்துமாறு கோரிக்கை விடப்பட்டுள்ளது.
இதற்கிடையே இலங்கைக்குள்ளும் இஷாரா செவ்வந்தியைத் தேடும் நடவடிக்கைகளை தொடர்ந்தும் தீவிரமாக முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
You may like this...
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை News Lankasri
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam