ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் உக்ரைன் ஜனாதிபதி உரை - அரங்கமே அதிர்ந்த கரகோஷம்
ரஷ்யாவின் கடுமையான இராணுவ ஆக்கிரமிப்புக்கு மத்தியிலும் உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி, ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் உரையாற்றியுள்ளார்.
காணொளி வாயிலாக உணர்ச்சிவசப்பட்டு உரையாற்றிய உக்ரைன் ஜனாதிபதிக்கு, ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நீண்ட கரகோஷத்துடனான வரவேற்பு கிடைத்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளுடன் தங்கள் நாட்டை இணைத்துக் கொள்ளுமாறு உக்ரைன் ஜனாதிபதி கோரிக்கை விடுத்த நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.
இதன் போது ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை, உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கண்டித்துள்ளார்.
எங்கள் நாட்டில் உள்ள ஒவ்வொரு சதுக்கமும் சுதந்திரத்தின் அடையாளம் என்று அழைக்கப்படுகின்றது. யாரும் எங்களை உடைக்க முடியாது. ஏனென்றால் நாங்கள் உக்ரேனியர்கள் என ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைனை ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிசையில் வரவேற்குமாறு அவர் இதன் போது கோரிக்கை விடுத்துள்ளார்.
நாங்கள் எங்கள் சுதந்திரத்திற்காகவும், எங்கள் உரிமைகளுக்காகவும், எங்கள் வாழ்விற்காகவும் போராடுகிறோம். மேலும் ஐரோப்பாவின் சம உறுப்பினர்களாக இருக்கவும் நாங்கள் போராடுகிறோம். அதில் எங்களுடன், ஐரோப்பிய ஒன்றியம் வலுவாக இருக்கும்.
தயவு செய்து, மக்கள் எங்களுடன் ஒன்றாக இருப்பதை நிரூபித்து காட்டுங்கள். பின்னர் நாங்கள் மரணத்தை வெல்ல முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
உக்ரேன் ஜனாதிபதியை வரவேற்ற ஐரோப்பிய நாடாளுமன்ற பிரதிநிதிகள் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பியமை சிறப்பம்சமாகும்.
The elected representatives of 27 EU countries applaud Zelensky (video link)
— Alex Taylor (@AlexTaylorNews) March 1, 2022
I reported from this place for 30 years and never saw it speak with one, very loud voice like this before. Putin has done what no one else achieved - brought the whole of our continent together, united pic.twitter.com/01X4xCBExs

மகாநதியை தொடர்ந்து விஜய் டிவியில் மாற்றப்படும் 2 சீரியல்களின் நேரம்.. எந்தெந்த தொடர் தெரியுமா? Cineulagam

இந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின் கோடிஸ்வரயோகம் பெறுவார்களாம்! நீங்க எந்த மாதம்? Manithan

ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam
