யாழில் அடிகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞன்
யாழ்ப்பாணம் (Jaffna) வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் இளைஞர் ஒருவர் அடிகாயங்களுடன் மீட்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று இரவு (03) இடம்பெற்றுள்ளது.
முன்பகை காரணம்
இந்த இளைஞன் மீது சரமாரியான தாக்குதல் நடாத்தப்பட்டே வீசப்பட்டிக்கலாம் என பிரதேச மக்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற மருதங்கேணி பொலிஸார் தாக்குதலுக்குள்ளான இளைஞனை மீட்டு மருதங்கேணி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தாக்குதலுக்குள்ளான இளைஞனுக்கு நீதிமன்றில் பல்வேறு வழக்குகளும் மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகளும் உள்ளதாகவும், முன்பகை காரணமாக குறித்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாமென பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவித்துள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
குணசேகரன் செய்த விஷயத்தால் பெண்கள் உச்சக்கட்ட அதிர்ச்சி.. எதிர்நீச்சல் தொடர்கிறது அடுத்த வார ப்ரோமோ Cineulagam
இறந்த அமுதா, அதிரடியாக கைதான ஜனனி, அடுத்து நடந்த எதிர்ப்பார்க்காத விஷயம்.... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு கதைக்களம் Cineulagam