பாடசாலை மாணவர்களுக்கான சீருடை தொடர்பில் சீனா வழங்கியுள்ள உறுதி
2025ஆம் ஆண்டு பாடசாலை மாணவர்களுக்கு தேவையான சீருடைத் துணிகளை நன்கொடையாக வழங்க சீன அரசாங்கம் தயாராக இருப்பதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong தெரிவித்துள்ளார்.
கெப்பிட்டிபொல தேசிய பாடசாலையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
நடைமுறைப்படுத்தப்படும் திட்டம்
சீருடைத் துணிகளையும் 2024ஆம் ஆண்டில் 80 சதவீத பாடசாலை சீருடைத் துணிகளையும் நன்கொடையாக வழங்கியதாகவும், அந்தத் தொகையை 2025ஆம் ஆண்டில் 100 சதவீதமாக அதிகரிக்க சீனா தீர்மானித்துள்ளதாகவும் தூதுவர் தெரிவித்துள்ளார்.
வருட இறுதிக்குள் 3 பிரிவுகளின் கீழ் இதனை வழங்க எதிர்பார்ப்பதாகவும் சீனா, இலங்கையின் உண்மையான நண்பனெனவும், நல்லதொரு பங்காளியெனவும் தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின்(Aunra Kumara Dissanayake) பலமான தலைமைத்துவத்தின் கீழ் இலங்கை புதிய யுகத்தை நோக்கி நகர்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த புலமைப்பரிசில் திட்டம் 2018ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு தற்போது இலங்கையில் 20 பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பிள்ளைகளின் கல்விக்கு உதவும் வகையில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சீனத் தூதுவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

Brain Teaser Challenge: மனதை குழப்பும் புதிர்- 7 வினாடியில் திருடனின் மனைவியை கண்டுபிடிக்க முடியுமா? Manithan

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri
