மட்டக்களப்பு - மயிலம்பாவெளி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் உயிரிழப்பு
மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மயிலம்பாவெளி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் 28 வயதுடைய இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு - மயிலம்பாவெளி பிரதான வீதியோரத்தில் நேற்று(24) அதிகாலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு நகரில் இருந்து ஏறாவூர் நோக்கி சென்ற மோட்டார் வண்டி வேக கட்டுப்பாட்டை இழந்து - வீதியோரத்தில் இருந்த கொங்ரீட் தூணில் மோதுண்டு விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளாதாகவும் ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
ஏறாவூர் பகுதியில் இருந்து மட்டக்களப்பு நகருக்கு சென்று தனது நண்பனை வீட்டில் விட்டுவிட்டு, மீண்டும் ஏறாவூர் சென்ற வேளையே விபத்து இடம்பெற்றுள்ளது.

சடலம் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மட்டக்களப்பு திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.நசீர் சடலத்தை பார்வையிட்டதுடன் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
யாரிந்த பீற்றர் எல்பர்ஸ்... IndiGo தலைமை நிர்வாக அதிகாரியின் சம்பளம், சொத்து மதிப்பு எவ்வளவு News Lankasri
ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட இளைஞர்: பெற்றோர்களுக்கு குவியும் பாராட்டு News Lankasri
ட்ரம்பின் மிகப்பெரிய திட்டம்... ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து நான்கு நாடுகளை குறிவைக்கும் அமெரிக்கா News Lankasri