வீதியைக் கடக்க முயன்ற இளைஞனுக்கு நேர்ந்த துயரம்!
கேகாலை- துல்ஹிரிய பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தானது நேற்றையதினம்(14.3.2026) இடம்பெற்றுள்ளது.
அபேபுஸ்ஸ திசையிலிருந்து வாரியகொட திசை நோக்கிப் பயணித்த லொறி ஒன்று, வீதியைக் கடக்க முயன்ற பாதசாரி மீது மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
மேலதிக விசாரணை
இந்த விபத்தில் படுகாயமடைந்த நபர் உடனடியாக வரகாப்பொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் உயிரிழந்தவர் துல்ஹிரிய பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி வரகாப்பொல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
காணாமல் போகும் கோமதி.. மகன்களிடம் ரூ. 10 லட்சத்தை திரும்ப கேட்ட பாண்டியன்.. அடுத்து பாண்டியன் ஸ்டோர்ஸில் நடக்கப்போவது இதுதான் Cineulagam