வவுனியாவில் இடம்பெற்ற கைது நடவடிக்கைகள்
வவுனியா - பூந்தோட்டம் பகுதியில் இளைஞரொருவர் ஹெரோயினை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை நேற்று (11.10.2022) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மகாரம்பைக்குளம் பகுதியை சேர்ந்த 32 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
விசேட அதிரடி படையினரால் சந்தேகநபர் கைது
பூந்தோட்டம் - கண்ணன்கோட்டம் பகுதியில் மடுகந்த விசேட அதிரடி படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மீட்கப்பட்ட ஹெரோயின் போதைபொருள்
சந்தேகநபர் கைது செய்யப்பட்டபோது அவரிடமிருந்து 3 கிராம் 770 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபரை முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, வவுனியாவில் முச்சக்கர வண்டி ஒன்றினை திருடிய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர்
கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



