யாழில் அதிகரிக்கும் போதைப்பொருள் பாவனை: இருவர் கைது
யாழ்ப்பாண மாவட்டத்தில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த நபரொருவர் நீண்ட காலமாக பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நிலையில் ஹேரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் கோப்பாய் - கரந்தின் சந்தியில் வைத்து நேற்று (10.10.2022) கைது செய்யப்பட்டுள்ளார்.
கோப்பாய் - செல்வபுரத்தைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை கைது செய்யும் போது அவரிடமிருந்து 5கிராம் 400மில்லிகிராம் ஹேரோயின் போதைப்பொருள் மீட்க்கப்பட்டுள்ளது.
குறித்த இளைஞரை இன்று(11.10.2022) நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நல்லூர்
இதேவேளை கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்வியங்காட்டு பகுதியில் 1கிராம் 400மில்லிகிராம் ஹேரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நல்லூர் பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவரை மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



