யாழ்.மந்திரி மனையை பார்வையிட்ட அமைச்சர் பிமல் ரத்நாயக்க
யாழ் நல்லூரில் அமைந்துள்ள மந்திரி மனையை அமைச்சர் பிமல் ரத்நாயக்க நேற்றையதினம்(18) பார்வையிட்டுள்ளார்.
இலங்கையில் காணப்படும் பாரம்பரியமான மாளிகைகளில் ஒன்றான மந்திரி மாளிகை பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமானது இதனை பாதுகாப்பதற்காக சம்பந்தப்பட்ட அமைச்சரோடு கலந்துரையாடி சின்னத்தை பாதுகாப்பதற்கான செயற்பாட்டினை எடுப்பதாக உறுதி அழித்துள்ளார்.
மந்திரி மாளிகை
நேற்றுமுன் தினம்(17) யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள மந்திரிமனை இடிந்து விழுந்து பகுதியளவில் சேதம் அடைந்திருந்தது.
இதனை பார்வையிடுவதற்காக அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க இராமலிங்கம் சந்திரசேகரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கருணை நாதன் இளங்குமரன் பார்வையிட்டனர்.
அவர்களுடன் தொல்லியல் திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் யு.ஏ பத்துலஜீவ மற்றும் தொல்லியல் திணைக்களத்தின் புனர்நிர்மாண உத்தியோகத்தர் கபிலன் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதன் போது மந்திரி மனையின் தற்போதைய நிலை தொடர்பாக இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.








