மன்னாரில் மாவீரர் தின நிகழ்வில் ஈடுபட்ட இளைஞர் கைது
மன்னாரில் மாவீரர் தின நிகழ்வில் ஈடுபட்ட 25 வயதுடைய இளைஞர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாவீரர் தின பதாகையொன்றை (பேனர்) எழுத்தூர் பகுதியில் வீதிக்கு அருகில் காட்சிப்படுத்திய நிலையில் வியாழக்கிழமை (26) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
தடுத்துவைக்கப்பட்டு விசாரணை
குறித்த இளைஞர் வீதியால் பயணித்துக்கொண்டிருந்த போது பொலிஸ் புலனாய்வாளர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இனைஞரின் உடமையில் இருந்து மாவீரர் தின பதாகை (பேனர் ) மற்றும் விடுதலைப்புலிகளின் கொடி ஆகியவை மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதனையடுத்து இளைஞர் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக அறியமுடிகிறது.
இந்து சமுத்திரம் இனி சீனாவின் கையிலா! 20 மணி நேரம் முன்
போருக்காக அழைக்கலாம்... தயாராக இருக்க 100,000 பிரித்தானிய ரிசர்வ் படையினருக்கு அறிவுறுத்தல் News Lankasri