சுன்னாகம் பகுதியில் வீடுடைத்து நகை திருடிய இளைஞர் கைது
யாழ். சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுவில் - மல்வம் பகுதியில் வீடுடைத்து நகை திருடிய குற்றச்சாட்டின் பேரில் 20 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுன்னாகம் பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் போதைப்பொருள் தடுப்பு பொலிஸார், இன்றையதினம் (18.01.2024) மல்வம் பகுதியில் வசிக்கும் 20 வயதுடைய இளைஞர் ஒருவரையே இவ்வாறு கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் நல்லூர் மற்றும் மல்வம் பகுதிகளில் விற்பனை செய்யப்பட்ட 5 1/2 பவுண் திருட்டு நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகள்
மேலும், குறித்த சந்தேகநபரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் உடுவில் - மல்வம் பகுதியில் வீடு ஒன்றினை உடைத்து திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளதையடுத்தே குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Brain Teaser Maths: கணக்கு புலிகளுக்கே சவால் விட்ட புதிர்... உங்களால் தீர்க்க முடியுமா பாருங்கள்? Manithan
