கருணா - பிள்ளையான் பின்னணியில் தீட்டும் திட்டம் : தேரரால் அம்பலமான இரகசியம்
கிழக்கில் கருணா தலைமையிலான குழு எச்சந்தர்ப்பத்திலும் ஆயுதங்களுடன் போராட்டத்தில் குதிக்கலாம் என மட்டக்களப்பு அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
தனக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இன்று கிழக்கில் கருணா மற்றும் பிள்ளையான்,ஏனைய குழுக்கள் கௌரவமாக இருக்கின்றனர்.ஆனால் அவர்களின் பின்னணியில் ஏதோ ஒரு திட்டம் தீட்டப்படுவதாகவே தோன்றுகிறது.
வெளியில் தெரியாவிட்டாலும் கருணாவின் குழு இன்றும் இருக்கிறது. அவர்களிடம் ஆயுதங்கள் இப்போது இல்லாவிட்டாலும் எச்சந்தர்ப்பத்திலும் ஆயுதங்கள் எடுக்க கூடும் நான் அடித்து சொல்லுகிறேன்.
அந்த குழுவிற்கு கருணாவே தலைமை தாங்குகிறார். ஆயுதம் ஏந்துவதற்கான சூழல் இருக்கிறது. ஆனால் அதற்கான அவதானிப்பு அரசாங்கத்திடம் இல்லை. இந்த காரணங்களை கொண்டே அன்று நான் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் சவால் விட்டேன்.
யுத்தம் முடிந்து விட்டால் அதில் பயன்படுத்திய பாரியளவான ஆயுதங்கள் எங்கே,யார் அவற்றை பறிமுதல் செய்தனர்?யாரிடம் ஒப்படைக்கப்பட்டது? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது செய்திகளின் தொகுப்பு...
செல்வம் எம்.பி தொடர்பில் வெளியான மற்றுமொரு குரல்பதிவு! வீடுகளுக்கு தேடிச்சென்று அச்சுறுத்தும் கும்பல்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |