மனித உயிர்களுடன் விளையாட வேண்டாம் மருத்துவர்களுக்கு அரசாங்கம் எச்சரிக்கை
மனித உயிர்களுடன் விளையாட வேண்டாம் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கு அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மத்திய வங்கியின் அனைத்து பணத்தையும் வழங்கினாலும் கூட, அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் அரசியல் நோக்கங்கள் நிறைவேறாது பிரதி சுகாதார துணை அமைச்சர் ஹன்சக விஜயமுனி தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் குறைந்தபட்ச அதிகாரத்தைக்கூட இதுவரையில் பயன்படுத்தியதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் அண்மையில் நாடு முழுவதும் நடத்திய 48 மணி நேர வேலைநிறுத்தம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.
மருத்துவர்களுக்கு பிரச்சினைகள் இருப்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம் எனவும் அரசுக்கு கிடைக்கும் நிதி வசதிகளுக்கு ஏற்ப அந்த பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.
சுமார் நூறு ஆண்டுகளாக இயங்கி வரும், தற்போது பக்குவ நிலை அடைந்திருக்க வேண்டிய ஒரு தொழிற்சங்கம் இவ்வளவு கட்டுப்பாடின்றி செயல்படுவது குறித்து கேள்வி எழுகிறது என தெரிவித்துள்ளார்.
நோயாளிகளை முன்வைத்து தங்களது கோரிக்கைகளை முன்னெடுக்க முயல்கிறார்கள் எனவும் மனித உயிர்களுடன் விளையாட வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.
பணிக்கு திரும்பி சேவை செய்யுமாறு நாங்கள் அவர்களிடம் கேட்டுக் கொள்கிறோம் எனவும் சங்கம் இதுவரை தங்களால் செய்யக்கூடிய அதிகபட்ச நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பிட்ட அரசியல் நோக்கங்களுக்காகவே அவர்கள் செயல்படுகின்றனர் என பிரதி அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 13 மணி நேரம் முன்
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan