மருத்துவர்களின் கையெழுத்து குறித்து வெளியான அறிவுறுத்தல்
இலங்கையில் மருத்துவர்கள் தெளிவான கையெழுத்தில் மருத்து சீட்டுக்களை எழுத வேண்டுமென அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை மருத்துவ பேரவை அதிகாரப்பூர்வ அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.
மருந்து பரிந்துரை வழிகாட்டுதல்களை கட்டாயமாகப் பின்பற்றுமாறு அனைத்து மருத்துவர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
மருந்தாளர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து சில மருத்துவர்கள் தெளிவற்ற முறையில் மருந்துச் சீட்டுகள் எழுதி வழங்குகின்றனர் என பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக மருத்துவ பேரவை தெரிவித்துள்ளது.

இவ்வாறு தெளிவற்ற மருந்துப் பரிந்துரைகள் காரணமாக சரியான மருந்தை அடையாளம் காணுவதில் சிரமம் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இதனால் நோயாளி ஆபத்து ஏற்படக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மருந்துச் சீட்டுகள் எவ்வாறு எழுத வேண்டும் மற்றும் பரிந்துரைகள் எவ்வாறு பரிந்துரைக்கப்பட வேண்டும் என்பது குறித்த தெளிவான நடைமுறைகளை இலங்கை மருத்துவ பேரவை குறிப்பிட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவை அதிகாரப்பூர்வ நடைமுறை விதிமுறைகளில் விரிவாக இடம்பெற்றுள்ளன என பேரவை விளக்கியுள்ளது.
அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல்களை பின்பற்றாத மருத்துவர்களுக்கு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை மருத்துவ பேரவை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை, இந்த எச்சரிக்கை தொடர்பில் மருத்துவர்கள் தரப்பிலிருந்து எவ்வித பதில்களும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.