ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு நேர்ந்த விபரீதம்! இளம் தாய் பரிதாபமாக பலி
மொனரகல - புத்தல பகுதியில் வீட்டின் அறையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலத்த தீக்காயங்களுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த இளம் தாய் இன்று (18) உயிரிழந்துள்ளார்.
நேற்று (17 ) மொனராகல வீதியின் நாமண்டிய பகுதியிலுள்ள வீட்டின் அறையில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனை
அனர்த்தம் காரணமாக 29 வயதான தந்தை திலுக்ஷ மதுசங்க, 26 வயதான தாய் சுராஜி சகுந்தலா மற்றும் 3 வயது மகள் ஒனல்யா ஆகியோர் படுகாயமடைந்து மொனராகல மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில், 26 வயதான கே.டி. சுராஜே சகுந்தலா என்ற இளம் தாய் இன்று (18) காலை துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.

தீக்காயமடைந்த மூவரும் மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஆபத்தான நிலையில் இருந்த தாய் இன்று காலை உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தில் காயமடைந்த அவரது கணவர் ஜே.எம். திலுக்ஷா மதுசங்க (29) மற்றும் மகள் ஜே.எம். ஒனல்யா (03) ஆகியோர் மேலதிக சிகிச்சைக்காக காலியில் உள்ள கராபிட்டிய போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேவேளை, உயிரிழந்த பெண்ணின் பிரேத பரிசோதனை வெல்லவாய நீதவான் பூர்ணா ஷியாமலி தலைமையில் நடைபெற உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
18 ஆண்டுகள் கழித்து ராகு-சூரிய சேர்க்கை: அடுத்த ஒரு மாதத்ததுக்கு இந்த 4 ராசிகளுக்கு பணமழை தான்! Manithan
ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் கூட்டு ராணுவப் பயிற்சி: போர்க்கப்பல்களுடன் களமிறங்கிய முன்னணி நாடுகள் News Lankasri
கெத்தாக வீட்டிற்குள் வந்த ஜனனி, குணசேகரன் சொன்ன விஷயம்... எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam