காதலினால் ஏற்பட்ட விபரீதம்! வீடு புகுந்த கும்பலினால் இளைஞர் கொடூரமாக வெட்டி படுகொலை
காலி, இக்கடுவை பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நேற்று புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள், இளைஞர் ஒருவரை வாளால் வெட்டிப்படுகொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் இக்கடுவை பகுதியை சேர்ந்த 29 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.
படுகொலைக்கு காரணம்
நேற்று மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், மேற்படி இளைஞரின் வீட்டுக்குள் நுழைந்து அவர் மீது வாளால் கொடூரமாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இவ்வாறு தாக்குதலுக்கு இலக்கான இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியானதை அடுத்து, தாக்குதலை நடத்திய நபர்கள் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பியோடியுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாகப் பொலிஸார் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சம்பவ இடத்தில் நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, காதல் விவகாரத்தில் ஏற்பட்ட முரண்பாடே இந்தப் படுகொலைக்குப் பிரதான காரணம் எனத் தெரியவந்துள்ளது.
கொலையாளிகளைக் கைது செய்வதற்காகப் பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.